ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் “AAA”. படத்தில் சில காட்சிகளும் வசனங்களும் “AAA” ரேட்டிங்கில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. “AAA” என்றால் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்று அர்த்தம் சொல்லப்படுகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் வைரமுத்து ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை சிம்புவே பாடியுள்ளார். இப்பாடலை பிரம்மாண்டமாக படமாக்க வேண்டும் என இயக்குனரிடம் சொல்லியிருக்கிறார் சிம்பு. ஏற்கனவே பட்ஜட் பல மடங்கு உயர்ந்துவிட்டதால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அதிகமாக செலவு செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.
இதை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்புவிடம் சொல்ல, கடுப்பாகிப் போன சிம்பு, “AAA” படத்தைப் பார்க்காதீர்கள் என்று ரசிகர்களுக்கு ட்விட்டரில் அறிவிப்பேன் என மிரட்டுகிறாராம்.