Day: May 21, 2017
இன்று ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி
இன்றிரவு நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் புனே அணியை எதிர்த்து மும்பை இண்டியன்ஸ் அணி விளையாட உள்ளது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் 10-வது ஐ.பி.எல். சீசன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் தலா 2 முறை மோதின. மே 14ம் தேதியுடன் லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்தன. இதன் முடிவில் மும்பை 10 வெற்றிகளை பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. 9 வெற்றிகளுடன் …
‘சங்கமித்ரா’ படத்தை சர்வதேச அளவில் பேச வைக்கப்போகிறேன் : சுந்தர். சி
‘சங்கமித்ரா’ சர்வதேச அளவில் பேசப்படும். அதுதான் எங்கள் குறிக்கோள் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். பிரான்ஸில் கான் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள ‘சங்கமித்ரா’ படம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றுள்ளனர். கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சங்கமித்ரா’ படத்தின் …
‘சங்கமித்ரா’ படத்தை சர்வதேச அளவில் பேச வைக்கப்போகிறேன் : சுந்தர். சி Read More »
காதலரை மிரட்டி கைக்குள் வைத்திருக்கும் ஆலியா பட்
பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் சித்தார்த் மல்ஹோத்ராவும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் சேர்ந்து ரீலோடட் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்கள். சித்தார்த் மற்றும் ஜாக்குலின் இடையே தற்போது நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆலியா பட்டுக்கு தெரிய இனி ஜாக்குலின் பெர்ணான்டஸுடன் சேர்ந்து பார்த்தேன் அவ்வளவு தான் என தனது காதலரை எச்சரித்துள்ளாராம். காதலியின் பேச்சை கேட்டு சித்தார்த்தும் ஜாக்குலினுடன் ஊர் சுற்றுவதை நிறுத்தியுள்ளாராம்.
“AAA” தயாரிப்பாளரை மிரட்டும் சிம்பு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் “AAA”. படத்தில் சில காட்சிகளும் வசனங்களும் “AAA” ரேட்டிங்கில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. “AAA” என்றால் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்று அர்த்தம் சொல்லப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் வைரமுத்து ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை சிம்புவே பாடியுள்ளார். இப்பாடலை பிரம்மாண்டமாக படமாக்க வேண்டும் என இயக்குனரிடம் சொல்லியிருக்கிறார் சிம்பு. ஏற்கனவே பட்ஜட் பல மடங்கு உயர்ந்துவிட்டதால், தயாரிப்பாளர் …
இலங்கையில் ஆலய கட்டுமானம் இடிந்து பலர் காயம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள இந்து ஆலயமொன்றின் கட்டுமானப் பணிகளின் போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். இன்று சனிக்கிழமை மாலை இடம் பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மற்றும் மட்டக்களப்பு அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான மண்டப கட்டடப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மண்டபத்திற்கான கூரை கான்கிரீட் இடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை கட்டடம் பாரம் தாங்காமல் இடிந்து …
ரஜினிக்கு எங்களுடைய கதவு எப்போதும் திறந்தே இருக்கும் பா.ஜனதா
ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசிஉள்ள நிலையில் எங்களுடைய கதவு ரஜினிக்கு எப்போதும் திறந்தே இருக்கும் என கூறி பா.ஜனதா தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்து உள்ளார். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரஜினிக்காக பா.ஜனதாவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். நல்ல மக்கள் யார் வேண்டு மானாலும் பா.ஜனதாவில் வந்து சேரலாம் என்றார் அமித் ஷா. ரஜினி காந்த் அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்விக்கு …
ரஜினிக்கு எங்களுடைய கதவு எப்போதும் திறந்தே இருக்கும் பா.ஜனதா Read More »
பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்
இந்தியாவின் கேரள மாநிலத்தில், பல ஆண்டுகளாக இந்துமத சாமியார் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாகக் கூறி, அவரது ஆணுறுப்பை வெட்டினார் ஆத்திரமடைந்த 23 வயது இளம் பெண். பாதிப்புக்குள்ளான பெண்ணின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆணுறுப்பை வெட்டியது என்பது ஓர் அசாத்தியமான மற்றும் தைரியமான செயல் என்று கூறியுள்ளார். குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சந்தேக நபரின் பெயர் கங்கேஷானந்தா தீர்த்தபடா என்றும், அவர் உடல்நலமின்றி அவதிப்பட்டு வரும் அப்பெண்ணின் தந்தைக்கு பிரார்த்தனை சடங்குகளை …
பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண் Read More »
தமிழகம், புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்கும் கனவு பலிக்காது: நாராயணசாமி
புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற கனவு பலிக்காது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் ராஜீவ்காந்தி நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி இதனை தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி ஈடுப்பட்டுள்ளார் என அவர் கூரினார்.