பத்ரிநாத் கோயில் அருகே நிலச்சரிவு: யாத்ரிகர்கள் தவிப்பு

இமயமலையிலுள்ள பிரபலமான கோயிலான பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலைகள் பிளவுபட்டுள்ளதால் 15 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற முடியாமல் உள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள இந்த கோயிலுக்கு செல்லும் வழியான விஷ்ணுபிரயாக் என்னும் இடத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் பாதி வழியில் மக்கள் நிற்பதாகவும், ஜோஷிமுட் முதல் பத்ரிநாத் வரை உள்ள நெடுஞ்சாலை பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாவட்ட நிர்வாகம் மாற்றம் பேரிடர் மேலாண்மை குழுவினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜே சி பி இயந்திரங்களை கொண்டு இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. 15 ஆயிரம் பேரும் பாதுகாப்பாக இருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதால், சனிக்கிழமை பிற்பகல் மலைப்பாதை சரிசெய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top