கால்பந்தில் இந்தியா இத்தாலியை வென்றது

உலகக்கோப்பை கால்பந்தில் பதினேழு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் முதன்முறையாக இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான இத்தாலி அணியுடன் இளம் இந்திய அணி நேற்று முன்தினம் மோதியது. அரிஸோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் அபிஜித் சர்கார் 31-வது நிமிடத்திலும், ராகுல் பிரவீன் 80-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.

8-வது நிமிடத்தில் கோமல் தாட்டல், இத்தாலி வீரர்களுக்கு போக்குக்காட்டி பந்தை வேகமாக முன்னெடுத்துச் சென்றார். ஆனால் கோல் அடிக்கும் அவரது முயற் சிக்கு பலன் கிடைக்கவில்லை. 13-வது நிமிடத்தில் அனிகெட் இலக்கை நோக்கி அடித்த பந்தை இத்தாலி கோல் கீப்பர் எளிதாக தடுத்து நிறுத்தினார்.

31-வது நிமிடத்தில் அபிஜித் சர்கார், இத்தாலி அணியின் தடுப்பு அரண்களை லாவகமாக ஏமாற்றி கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 59-வது நிமிடத்தில் எளிதாக கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை அனிகெட் தவறவிட்டார்.

இதேபோல் 75-வது நிமிடத்தில் ராகுல் பிரவீன் கோல்கம்பத்துக்கு மிகநெருக்கமாக கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றத் தவறி னார். அடுத்தடுத்து கோல் அடிக் கும் வாய்ப்புகளை இந்திய அணி உருவாக்கியதால் இத்தாலி அணி அதிர்ச்சியடைந்தது. 80-வது நிமிடத்தில் ராகுல் பிரவீன், பாக்ஸ் பகுதிக்குள் நுழைந்து அற்புதமாக கோல் அடிக்க இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணிக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனம், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல், சேவக் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top