இத்தாலி ஓபன் டென்னிஸ்: போபண்ணா ஜோடி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகரான ரோம் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் போபண்ணா- உருகுவேயின் பப்லோ குயேவாஸ் ஜோடி, பிரான்சின் பியரே-ஹியூக்ஸ் ஹெர்பெர்ட் – நிகோலஸ் மஹட் ஜோடியை எதிர்கொண்டு விளையாடியது.

இந்தப் போட்டியில் இரு ஜோடிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் மூன்று செட்டுகளும் ‘டைபிரேக்கர்’ வரை சென்றன.

முதல் செட் டைபிரேக்கரில் போபண்ணா ஜோடி 5-7 என தோல்வியடைந்தது. ஆனால், 2-வது செட் டை பிரேக்கரில் 7-2 வெற்றி பெற்றது. வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட் டைபிரேக்கரில் 12-10 என தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

காலிறுதிக்கு நுழைந்ததன் மூலம் போபண்ணா ஜோடிக்கு 180 ஏடிபி புள்ளிகளும், 32,010 யூரோவும் பரிசாகக் கிடைத்தன.

அதுபோல மகளிர் பிரிவில் இந்தியாவின் முன்னணி நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா – ஷ்வேடோவா ஜோடி 3-6, 6-7(7) என்ற செட் கணக்கில் இரண்டாம் நிலை ஜோடியான சான் – ஹிங்கிஸ் ஜோடியிடம் அரையிறுதியில் தோல்வியடைந்தது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top