Day: May 20, 2017

“மக்கள் பன்றி காய்ச்சலால் இறப்பது சகஜம்தான்” – இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் பேச்சு

சிம்லா: அதிக மக்கள் தொகை உள்ள மாநிலங்களில் மக்கள் பன்றி காய்ச்சலால் இறப்பது சகஜம்தான் என்ற இமாச்சல பிரதேச முதல்வர் பேச்சுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இமாச்சல பிரதேசத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் வீரபத்ர சிங் பேசுகையில், அதிக மக்கள் தொகை இருக்கும் மாநிலத்தில் மக்கள் பன்றி காய்ச்சலால் இறப்பது சகஜமான ஒன்றுதான் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. குறிப்பாக மாநிலத்தின் எதிர்கட்சியான பாஜ, முதல்வரின் இந்த பேச்சை கண்டித்துள்ளது. இதுகுறித்து பாஜ எம்பி அனுராக் தாகூர் கூறுகையில், முதல்வர் வீரபத்ரசிங்கின் இந்த பேச்சு முதிர்ச்சியற்றதும்,  மனிதாபிமானமில்லாததுமான பேச்சாகும். இதன் மூலம் முதல்வர் தன்னை உணர்ச்சியற்றவர் என்று காட்டிக் கொண்டது மட்டுமல்ல, அவர் பேச்சு எத்தனை நகைப்புக்குரியது என்பதையும் உலகின் முன்னால் காட்டி விட்டார். மக்கள் பன்றி காய்ச்சலால் சாவது சகஜம் தான் என்று பேசியதன் மூலம் அவர் முதல்வர் பதவி வகிக்க தார்மிக தகுதியை இழந்தவராகிறார். எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.அண்மையில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் முறைகேடு காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் முதல்வரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share

உத்திரபிரதேசத்தில் அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

லக்னோ: உத்திரபிரதேசத்தில் லோகமான்யா திலக் அதிவிரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உன்னாவு ரயில் நிலையம் அருகே ரயில் தடம்புண்டது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை இந்த தகவலும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Share

கால்பந்தில் இந்தியா இத்தாலியை வென்றது

உலகக்கோப்பை கால்பந்தில் பதினேழு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் முதன்முறையாக இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இத்தாலி அணியுடன் இளம் இந்திய அணி நேற்று முன்தினம் மோதியது. அரிஸோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அபிஜித் சர்கார் 31-வது நிமிடத்திலும், ராகுல் பிரவீன் 80-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தில் இந்திய அணி முழுமையாக …

கால்பந்தில் இந்தியா இத்தாலியை வென்றது Read More »

Share

வருடக்கணக்கில் முடிவெடுக்காமல் யோசிப்பவர் ரஜினி : நடிகை கஸ்தூரி

“வருடக்கணக்கில் முடிவெடுக்காமல் யோசிப்பவர் ரஜினி” என்று நடிகை கஸ்தூரி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ரஜினி அரசியல் வரபோவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை வரவேற்பவர்களும் உண்டு, எதிர்ப்பவர்களும் உண்டு. அரசியல் தலைவர்கள் அனைவரும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி குறித்து பதிவிட்ட்டுள்ளார். அதில் அவர் கூறியதவது:- நல்ல அரசியல் தலைவர் எதிர்ப்பாராத …

வருடக்கணக்கில் முடிவெடுக்காமல் யோசிப்பவர் ரஜினி : நடிகை கஸ்தூரி Read More »

Share

இத்தாலி ஓபன் டென்னிஸ்: போபண்ணா ஜோடி தோல்வி

இத்தாலியில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் போபண்ணா – பப்லோ குயேவாஸ் ஜோடி போராடி தோல்வி கண்டு வெளியேறியது. இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகரான ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் போபண்ணா- உருகுவேயின் பப்லோ குயேவாஸ் ஜோடி, பிரான்சின் பியரே-ஹியூக்ஸ் ஹெர்பெர்ட் – நிகோலஸ் மஹட் ஜோடியை எதிர்கொண்டு விளையாடியது. இந்தப் போட்டியில் இரு ஜோடிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் மூன்று …

இத்தாலி ஓபன் டென்னிஸ்: போபண்ணா ஜோடி தோல்வி Read More »

Share

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 2 தங்கம் வென்ற விருதுநகர் மாணவி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் மீன்ராஜ் என்பவரது மகள் சுபஸ்ரீ. நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு முடித்து 8ம் வகுப்பு செல்லும் சுபஸ்ரீ, சிறு வயதிலிருந்தே ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதையறிந்த இவரது பெற்றோர் சாத்தூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் இவரை சேர்த்து பயிற்சி அளித்தனர். அங்கு 2 ஆண்டுகள் தீவிரப் பயிற்சி பெற்ற சுபஸ்ரீ, பின்னர் கோத்தகிரியில் உள்ள பள்ளியில் …

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 2 தங்கம் வென்ற விருதுநகர் மாணவி Read More »

Share

விவசாயிகள் தஞ்சையில் 7-வது நாளாக ரயில் மறியல் போராட்டம்

தஞ்சை: காவிரி தீர்ப்பாயத்தை கலைக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரெட்டிப்பாயைத்தில் 7வது நாளாக ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்துநிறுத்த வேண்டும், காவிரி தீர்ப்பாயத்தை கலைக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மீட்பு குழுவினர் கடந்த 7 நாட்களாக இந்த போராட்டம் நடத்தி வருகின்றனர். 7-வது நாளான இன்று, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், தஞ்சை சாலியமங்கம் ரயில்வே கேட்டில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் ஒற்றைத் தீர்ப்பாயச் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சாகுபடி கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் மே 15 முதல் 21 வரை ஒரு வாரத்துக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத் தில் 4 இடங்களில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பூதலூர் அருகே அய்யனாபுரத்தை அடுத்த விண்ணணூர்பட்டியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணிய ரசன் தலைமையில் திரைப்பட இயக்குநர் மு.கவுதமன், தமிழ்த் தேசிய இயக்க பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகி யோர் தலைமையில் விவசாயி கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர், மயிலாடுதுறையில் இருந்து திருச்சி சென்ற பயணிகளை ரயிலை மறித்தனர்.

Share

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகமானவையா? ஜூன் 3 முதல் கட்சிகள் நிரூபிக்கலாம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்யமுடியும், ஒரே கட்சிக்கு வாக்கு பதிவாகும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யமுடியும் என்றெல்லாம் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றச்சாட்டை  முன்வைத்திருந்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவாலை ஜூன் 3-ம் தேதி முதல் எதிர்கொள்ள தயார் என தலைமைத் தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 12-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறும் அரசியல் கட்சிகள் அதை நிரூபிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் …

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகமானவையா? ஜூன் 3 முதல் கட்சிகள் நிரூபிக்கலாம் Read More »

Share

பத்ரிநாத் கோயில் அருகே நிலச்சரிவு: யாத்ரிகர்கள் தவிப்பு

இமயமலையிலுள்ள பிரபலமான கோயிலான பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலைகள் பிளவுபட்டுள்ளதால் 15 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற முடியாமல் உள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள இந்த கோயிலுக்கு செல்லும் வழியான விஷ்ணுபிரயாக் என்னும் இடத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் பாதி வழியில் மக்கள் நிற்பதாகவும், ஜோஷிமுட் முதல் பத்ரிநாத் வரை உள்ள நெடுஞ்சாலை பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாவட்ட நிர்வாகம் மாற்றம் …

பத்ரிநாத் கோயில் அருகே நிலச்சரிவு: யாத்ரிகர்கள் தவிப்பு Read More »

Share
Scroll to Top