இந்தியாவை சேர்ந்தவர் அதுல்குமார் பாபுபாய் படேல் (58). கடந்த 10-ந்தேதி இவர் ஈகுவேடார் நாட்டில் இருந்து அமெரிக்காவின் அட்லாண்டாவுக்கு விமானம் மூலம் வந்தார்.
அவரை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அமெரிக்காவில் நுழைவதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. எனவே அவரை கைது செய்தனர்.
இதில் தேவையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அதிகாரிகள் அவரை பிடித்து வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை இருந்தது தெரியவந்தை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, நர்ஸ் ஒருவர் சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொண்டிருந்தார்.அப்போது பகுபாய் படேலுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது . இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் மரணமடைந்தார். இதயம் செயலிழப்பு காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். இவரது இறப்பு குறித்து இந்தியதூதரகம் மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.