ரஷ்ய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் பயங்கரவாதம் மற்றும் விமானப் பாதுகாப்பு பற்றிய முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது “முற்றிலும் சரி” என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
“பயங்கரவாதம் மற்றும் விமான சேவை தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும்” ஐ.எஸ்., மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் டிரம்ப் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூரவ அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரோஃபை சந்தித்தார் டிரம்ப்.
விமானங்களில் மடிக்கணினியின் உபயோகம் மற்றும் ஐ.எஸ் அமைப்பினரின் திட்டத்தை வெளிப்படுத்தும் அதீத ரகசிய தகவல்களை டிரம்ப் பகிர்ந்துள்ளதாக `வாஷிங்டன் போஸ்ட்` தெரிவித்துள்ளது.
தனது பங்குதாரரிடம் இருந்து பெற்ற ரகசிய தகவல்களை, அனுமதி பெறாமல் பகிர்ந்து கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரகசிய தகவல்களை வெளிப்படுத்தும் உரிமை அதிபருக்கு இருப்பதால் இது சட்டப்பூர்வமற்றதல்ல.