பிரதமர் மோடி இலங்கை சென்றிருந்த நிலையில், தங்கள் நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைப்பதற்கு சீனா இலங்கையிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டு சீனா அதன் நீர் மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்க ராஜபக்சே அரசு அதற்கு அனுமதி வழங்கியது. இது குறித்து இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கவலை தெரிவித்தது. இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் பாகிஸ்தானின் கராச்சியை நோக்கி செல்லவிருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் தன்னுடைய ஆதிக்கத்தை முன்செலுத்த வேண்டும் என முயற்சிக்கும் சீனாவின் நகர்வுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்கிறது. சீன நீர்மூழ்கி கப்பலை இந்திய பாதுகாப்பு முகமைகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.