பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 12ம் தேதி வெளியிடப்படும். பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். தேர்வு முடிவு வெளியான 10 நிமிடத்தில் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்த மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.
மாணவர்களின் சான்றிதழ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படும். புதிய பாடத்திட்டங்கள் குறித்து நாளை (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இட ஒதுக்கீடு செய்யாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.