Day: May 10, 2017

தென் கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜே பதவியேற்பு

தென் கொரியாவின் புதிய அதிபராக  மூன் ஜே  பதவியேற்று கொண்டார். அதிபராக அவர் ஆற்றிய முதல் உரையில், வட கொரியாவுடனான பொருளாதார மற்றும் உறவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மூன் ஜே தீர்க்கமான வெற்றியை பெற்றதையடுத்து அதற்கு மறுநாள் சியோலில் உள்ள தேசிய நாடாளுமன்ற கட்டட அலுவலகத்தில் தனது பதவிப்பிரமாணத்தை எடுத்துள்ளார். முன்னாள் மனித உரிமைகள் வழக்கறிஞரான மூன் ஜே, வட கொரிய அகதிகளின் மகன் ஆவார்.

Share

பிளஸ் 2 தேர்வு முடிவு செல்போனில் அனுப்பப்படும்: அமைச்சர் தகவல்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 12ம் தேதி வெளியிடப்படும். பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். தேர்வு முடிவு வெளியான 10 நிமிடத்தில் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் …

பிளஸ் 2 தேர்வு முடிவு செல்போனில் அனுப்பப்படும்: அமைச்சர் தகவல் Read More »

Share

முகநூல் தோழியைக் கொன்ற தீயணைப்பு வீரர் சிறையில் தற்கொலை

தன்னுடைய முகநூல் தோழி மீது காரை ஏற்றிக் கொலை செய்த தீயணைப்பு வீரர் இளையராஜா, சிறையில் தற்கொலை செய்துகொண்டார். வேறொரு நபருடன் நட்பு ஏற்பட்டதால், முகநூல் தோழியும் அரசுப் பள்ளி ஆசிரியருமான நிவேதா மீது காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று (புதன்கிழமை) சிறையில் உள்ள கழிவறை ஜன்னலில் கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். என்ன நடந்தது? கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் …

முகநூல் தோழியைக் கொன்ற தீயணைப்பு வீரர் சிறையில் தற்கொலை Read More »

Share

நீட் தேர்வில் முறைகேடுகள்: மருத்துவர்கள் சங்கம் தகவல்

நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ”இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் சென்ற ஞாயிறு அன்று நடத்தப்பட்டது. இந்தி, ஆங்கிலம், தமிழ், வங்கமொழி உள்ளிட்ட  10 மொழிகளில் நடத்தப்பட்டது. இதில் 180 வினாக்கள் இடம் பெற்றன. நாடு முழுவதும் ஒரே தேர்வு. அத்தேர்வின் அடிப்படையில் அகில இந்திய அளவில் தரப்பட்டியல் தயாரிக்கப்படும். அவ்வாறு இருக்கும் பொழுது வெவ்வேறு மொழிகளில், …

நீட் தேர்வில் முறைகேடுகள்: மருத்துவர்கள் சங்கம் தகவல் Read More »

Share

பணமதிப்பு நீக்கம்: பொருளாதாரம் மெதுவாக பழைய நிலைக்குத் திரும்புகிறது; தகவல்களை மூடிமறைப்பதில் ஆர்.பி.ஐ. தீவிரம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் துவங்கப்பட்ட 6 மாதங்களுக்குப் பிறகு, அதன் தாக்கம் மெதுவாகக் குறைவதாகத் தெரிகிறது. இந்நடவடிக்கையின் முழு பாதிப்புகளும் இன்னும் அறியப்படாத நிலையில், ஆர்.பி.ஐ. யும் பிரதமர் அலுவலகமும் தகவல்களை மூடி மறைப்பதில் தீவிரமாக இருக்கின்றன. இந்த நடவடிக்கை குறித்து பிரதமர் அலுவலகத்திற்கும் ஆர்பிஐ-க்கும் இடையே நடைபெற்ற ஆவணப்பரிமாற்றங்களின் நகல்களை  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) அடிப்படையிலான ஒரு மனு கோரியிருந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தீர்மானித்த விவரங்களை வெளியிடுவது நாட்டின் பொருளாதார நலன்களுக்கு கேடு …

பணமதிப்பு நீக்கம்: பொருளாதாரம் மெதுவாக பழைய நிலைக்குத் திரும்புகிறது; தகவல்களை மூடிமறைப்பதில் ஆர்.பி.ஐ. தீவிரம் Read More »

Share
Scroll to Top