நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு) மூலம் நிரப்பப்படுகின்றன. அந்தவகையில் பிளஸ்–2 படிப்பு முடித்த மாணவர்கள் 2017–2018–ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கு, நடப்பாண்டு முதல் ‘நீட் நுழைவு தேர்வு’ எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு இன்று நாடு முழுவதும் உள்ள 104 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடக்கிறது. காலை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் என 4 பாடங்களில் தலா 45 கேள்விகள் வீதம் 180 கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிபெண் வீதம் 720 மதிப்பெண் அளவிற்கு தேர்வு நடக்கிறது. சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். ஒரே கேள்விக்கு பல பதில்களை அளித்தாலும் அது தவறான பதிவாக கணக்கிடப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 8–ந்தேதி வெளியாகிறது.
நாட்டின் பிற மாநிலங்களின் உள்ள பாடத்திட்டத்தின் தரத்தைக் காட்டிலும், தமிழகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் தரம் சற்று குறைந்ததுதான் என்பதால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வது சற்று கடினம் என்று தமிழக அரசு வாதிட்டது. இந்த தேர்வால் கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களின் மருத்துவர் கனவு பொசுக்கப்படும் நிலை ஏற்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. எனினும் அதை மத்திய அரசு வழக்கும்போல் செவிமடுத்து கேட்கவில்லை.
இதனால் மாணவர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்று தமிழக அரசு உறுதி அளித்தது. அதே நேரத்தில் தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் அனுப்பிவிட்டு பரீட்சைக்கு தயாராகுங்கள் என்று தமிழக அரசு என்று முன்னர் அறிவித்திருந்தது தெரிந்ததே.