Day: May 6, 2017

பாகுபலி-2: உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை

சென்னை: பாகுபலி 2-ம் பாகம் இந்திய சினிமா கண்டிராத வசூல் சாதனை புரிந்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மாதம் 28-ம் தேதிக்கு திரைக்கு வந்த இந்த படம் இதுவரை 1000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்தியா முழுவதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக தினமும் 4000 திரையரங்குகளில் பாகுபலி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. பாகுபலி வெளியான முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டும் 680 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதேபோன்று வெளிநாடுகளில் முதல் வாரத்தில் 165 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனிடையே பாகுபலி திரைப்படத்தை இணையதளம் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ். ராடா, அனுஷ்கா, தமணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி திரைப்படம் இந்திய திரைப்பட துறையில் சாதனையாக கருதப்படுகிறது. 4 ஆண்டுகள் உடைத்து உருவாகிய படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திரை துறையினர் கருத்தாகும்.

Share

பாகிஸ்தான் 2 ஆண்டுகளில் பல முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது

புதுடெல்லி: போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதை பாகிஸ்தான் தினசரி வாடிக்கையாக வைத்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் 405 முறையும், 2016-ம் ஆண்டில் 449 முறையும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் தரப்பில் இருந்து 1142 தீவிரவாத சம்பவங்கள் நடத்தப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் 236 பேரும், பொதுமக்கள் 90 பேரும் உயிரிழந்தன. இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 507 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அத்துமீறல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்படும் போது சமூக ஊடகங்களில் தகவல் பரவி பாதுகாப்பு படையினரை பொதுமக்கள் சூழும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதனால் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

Share

50% இடஒதுக்கீடு ரத்து தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: மருத்துவ மாணவர்கள் அறிவிப்பு

கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டுவந்த 50 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக கடந்த 18 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களும், மாணவர்களும் தெரிவித்துள்ளனர். மாநில அரசின் உரிமையை பறிக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையை குறைந்தபட்சம் இந்த ஆண்டாவது விலக்கு பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள போராட்ட மாணவர்கள், எதிர்காலத்திலும் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் …

50% இடஒதுக்கீடு ரத்து தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: மருத்துவ மாணவர்கள் அறிவிப்பு Read More »

Share

ரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸ் நன்றி

ஹைத்ராபாத்: அன்பு எனும் அடைமழையால் நனைய வைத்த ரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார். நன்றிக்கடனாக முழுத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்விக்க முயன்றுள்ளேன் எனவும் கூறியுள்ளார். பாகுபலி படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் நோடிக்கு நொடி நினைத்துப் பெருமைப்படும் வாய்ப்பு தந்த ராஜமௌலிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பாகுபலி-2 திரைப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ1,000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Share

“ஒபாமாகேர்” திட்டம் முடிவுக்கு வருகிறது

குடியரசு கட்சியின் சுகாதார பாதுகாப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் நூலிழையில்  வெற்றியடைந்தை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஒபாமா கேர்’  திட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக  தெரிவித்திருக்கிறார்.  ‘ஒபாமா கேர்’ என்பது முன்னாள் அதிபர் பாராக் ஒபாமாவினால் முன்னர் கொண்டுவரபட்ட சுகாதர பாதுகாப்புத் திட்டமாகும். 217 வாக்குகள் ஆதரவாகவும், 213 வாக்குகள் எதிராகவும் பதிவான நிலையில் இந்த மசோதா வெற்றிபெற்றுள்ளது. தனக்கு முன்னர் அதிபராக இருந்த பராக் ஒபாமாவின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தை நீக்கிவிட்டு, புதிய …

“ஒபாமாகேர்” திட்டம் முடிவுக்கு வருகிறது Read More »

Share

கொடநாடு கொலை தொடர்பாக தினகரன், சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டம்

கடந்த ஏப்ரல் 24-ந் தேதி 11 பேர் கும்பல், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் புகுந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்ததுடன் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கிய செய்தி ஏற்கெனவே தெரிந்ததே. தொடர்ந்து இந்த கும்பல், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைக்குள் சென்று 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். போலிஸ் விசாரணையில், ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், அவரது கூட்டாளி சயான் உள்பட 11 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய …

கொடநாடு கொலை தொடர்பாக தினகரன், சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டம் Read More »

Share
Scroll to Top