ஜார்கண்ட்: பெண்களின் பெயரில் சொத்து வாங்கினால் பத்திர செலவு வெறும் 1 ரூபாய்

ஜார்கண்டில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட் அரசு, பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால், பத்திர பதிவு கட்டணம் வெறும் ரூ.1 மட்டும்தான் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

தற்போது அங்கு சொத்து பதிவு செய்ய 7 சதவீத பத்திர பதிவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதல்வர் ரகுபர்தாஸ் கூறுகையில், எங்களது இந்த அறிவிப்பின் மூலமாக பெண்களின் வளர்ச்சியில் மேம்பாடும், சமூக பாதுகாப்பும் கிடைக்கும். இந்த உத்தரவுக்கு விரைவில் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ.100 கோடி வரை நிதி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் 2019 லோக்சபா தேர்தலை குறிவைத்து அரசியல் ஆதாயத்திற்காக இதை மாநில அரசு அறிவித்துள்ளது என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் கூறத் தொடங்கி விட்டனர்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top