தவறாக நடக்கும் விமான பயணிகளுக்கு தடை

தவறாக நடக்கும் விமான பயணிகளை 3 மாதங்கள் முதல்  2 வருடம் வரை பயண தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர  உள்ளது. மத்திய அரசின்  இச்சட்டத்திற்கு ஒரே நேரத்தில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

விமான பயணத்தின் போது தவறாக நடந்து கொண்டால் அந்த குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து 3 விதமான தடைகளை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 3 மாதங்கள் முதல்  முதல் வாழ்நாள் தடை வரை விதிக்கப்படும்.  முதல் நிலை  வாய்மொழி துன்புறுத்தல், உடல்ரீதியான சைகைகள் போன்ற ஒழுங்கற்ற நடத்தைகளையும், இரண்டாம் நிலை அழுத்தம், உதைத்தல், முறைகேடான தொடுதல் போன்ற உடல் ஒழுங்கற்ற நடத்தையையும் உள்ளடக்கியுள்ளது. மூன்றாம் நிலை “உயிருக்கு அச்சுறுத்தல்” மற்றும் விமானத்திற்கு சேதம் ஏற்படுத்தும் நடத்தை ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த முடிவுக்கு இந்திய விமானப் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எத்தனை மாதம் தடை விதிக்கலாம் என்பதை விமான நிறுவனங்களின் முடிவுக்கு விட கூடாது என்று கூறியுள்ள இந்த சங்கம் அதை விமான போக்குவரத்து அமைச்சகம், அல்லது விமான போக்குவரத்து இயக்குநரகமே முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மத்திய அரசின் சட்டத்தை விமர்சித்துள்ளன. பயண தடைக்கு எதிராக நீதிமன்ற தடையாணை பெற முடியாத வகையில் புதிய சட்டம் இருக்க வேண்டும் விமான போக்குவரத்து துறை தொடர்பான வர்த்தக துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். பயணி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால் அவருக்கு இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.அனைத்து விமானங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம் என்று என்பதும் அவர்களின் கோரிக்கை ஆகும். டாடா விமான சேவையான விஸ்தாரா அரசின் முடிவை வரவேற்றுள்ளது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top