நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். இரு நீதிபதிகளும் தனித்தனியே அளித்த தீர்ப்பில் 4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாட்டின் மனசாட்சியை உலுக்கியது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு தனது ஆண் நன்பருடன் பேருந்தில் பயணம் செய்த நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். டெல்லி மருத்துவமனையிலும் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் நிர்பயா உயிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் தாகுர், ராம்சிங் ஆகிய 5 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகள் 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் ஒருவன் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளான். குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.