டெல்லி குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி கிரிக்கெட்

டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சில சுவாரஸ்யங்கள்:

► குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா இந்த போட்டியில் 43 பந்துகளுக்கு 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 77 ரன்களை எடுத்ததன் மூலம் தனது 5 ஆயிரம்(5,059) ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் தனது 31வது அரை சதத்தை பதிவு செய்தார். 5066 ரன்களுடன் பெங்களூரு அணியின் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

► டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பேட்டிங்கில் மொத்தம் 20 சிக்சர்கள் விளாசப்பட்டது. அதில் ரிசப் பேண்ட் -9 சிக்சர்களும், சாம்சனின் 7 சிக்சர்களும் ஷ்ரெயாசின் 2 சிக்சர்களும், ஆண்டர்சனின் 2 சிக்சர்களும் அடக்கம்.

► இந்த போட்டியில் 37.3 ஓவர்களில் குஜராத் லயன்ஸ் பேட்ஸ்மேன்களால் 11 சிக்சர்கள், டெல்லி டேர்டெவில்ஸ் பேட்ஸ்மேன்களால் 20 சிக்சர்கள் என மொத்தம் 31 சிக்சர்கள் விளாசப்பட்டது. மொத்தம் எடுக்கப்பட்ட 422 ரன்களில் 186 ரன்கள் சிக்சர்கள் மூலம் பெறப்பட்டவை. அதாவது மொத்த ரன்னில் 44% சிக்சர்கள் மூலம் எடுக்கப்பட்ட ரன்களாகும்.

► இந்தப் போட்டியில் மொத்தம் 31 சிக்சர்கள் விளாசப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு முன் 2010ம் ஆண்டில் சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் 30 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

► டெல்லி டேர்டெவில்ஸ் அணி 214 ரன்களை 17.3 ஓவரில் துரத்திப் பிடித்தது 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாகும். அதற்கு முன் 2007ம் ஆண்டில் சவுத் ஆப்பிரிக்கா அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 17.4 ஓவரில் 208 ரன்களை துரத்திப் பிடித்து வரலாற்றை பதிவு செய்திருந்தது.

► 209 ரன்களை டெல்லி டேர்டெவில்ஸ் அணி  துரத்திப்பிடித்தது ஐபிஎல் வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 2008ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்றப் போட்டியில் 215 ரன்களை துரத்திப்பிடித்து வரலாற்றை பதிவுசெய்திருந்தது.

► சஞ்சு சாம்சன் 7 சிக்சர்களை அவரது பங்கிற்கு விளாசித்தள்ளினார். நிதிஷ் ராணாவிற்குப் பிறகு 7 சிக்சர்களை பவுண்டரிகள் ஏதும் எடுக்காமல் விளாசியது குறிப்பிடத்தக்கது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நிதிஷ் ராணா, பவுண்டரிகள் ஏதும் அடிக்காமல் 7 சிக்சர்களை விளாசியிருந்தார்.

► இந்த ஆட்டத்தில் ரிஷப் பேண்ட் 43 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்கள் அடித்து 97 ரன்கள் பெற்றதன் மூலம் 225.58 ஸ்ட்ரைக் ரேட் பெற்றிருந்தார். இது இந்த சீசனில் 90+ ரன்கள் அடிக்கப்பட்டதில் இரண்டாவது அதிகபட்ச ஸ்ட்ரைக்ரேட் ஆகும்.

► இந்த ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் பேட்ஸ்மேன்களால் 20 சிக்சர்கள் விளாசப்பட்டது, ரன்களை சேஸ் செய்வதில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்களாகும். இதற்கு முன் டெல்லிடேர்டெவில்ஸ் வீரர்களால் இரண்டு முறை 19 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே அதிக பட்சமாக இருந்தது. அதற்கு முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் 15 சிக்சர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

► 214/3 ரன்களை டெல்லி டேர்டெவில்ஸ் அணி அடித்தது இரண்டாவது அதிகபட்சமாகும். இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217/7 ரன்களை டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கெதிராக துரத்தி பிடித்திருந்தது.

► 15 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 200+ ரன்களை டெல்லி டேர்டெவில்ஸ் அணி துரத்திப்பிடித்தது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறை. இதற்கு முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 201 ரன்களை துரத்திப்பிடித்து வெற்றியை பதிவு செய்திருந்தது.

► இந்த போட்டியில் உள்ள மற்றொரு சுவாரஸ்யம் என்னவெனில் கடந்த வருடம் இதே நாளில் நடைபெற்ற குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் ரிசப் பேண்ட் 43 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தார். அந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, குஜராத் லயன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

► இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை அதிக சிக்சர்கள் அடித்தவர்கள்:

வார்னர் – 23 சிக்சர்கள்
உத்தப்பா – 21 சிக்சர்கள்
ரிசப் பேண்ட் – 20 சிக்சர்கள்
சாம்சன் – 19 சிக்சர்கள்

(NEWS 7)

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top