Day: May 4, 2017

தூக்கு தண்டனை எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி: நிர்பயா தந்தை

புதுடெல்லி: நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நிர்பயா தந்தை, இது எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

Share

பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத்தலைவராக தொடர வாய்ப்பு கிடைக்குமா?

டெல்லி: குடியரசுத்தலைவர் தேர்தலில் மீண்டும் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்த பாஜக முன்வந்தால் போட்டி வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதேபோல் பாரதீய ஜனதா கட்சிக்கு போட்டியாக எதிர்க்கட்சிகளும் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. இதற்காக 9 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் அவரை எதிர்த்து யாரையும் நிறுத்த வேண்டாம் என்கிற முடிவுக்கு எதிர்க்கட்சிகள் வந்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஓய்வுக்கு பின் பிரணாப் முகர்ஜி வசிப்பதற்க்காக டெல்லியில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு தயாராகி வருவதால் பாஜக அவரை வேட்பாளராக நிறுத்தும் வாய்ப்பு இல்லை என தெரிகிறது. இதையடுத்து குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டி உருவாகியுள்ளது. இந்திய குடியரசுத்தலைவர்களில் ராஜேந்திர பிரசாத் தவிர வேறு யாருக்கும் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 15 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

Share

நிர்பயா பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனை உறுதி

புதுடெல்லி: நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். இரு நீதிபதிகளும் தனித்தனியே அளித்த தீர்ப்பில் 4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாட்டின் மனசாட்சியை உலுக்கியது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு தனது ஆண் நன்பருடன் பேருந்தில் பயணம் செய்த நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். டெல்லி மருத்துவமனையிலும் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் நிர்பயா உயிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் தாகுர், ராம்சிங் ஆகிய 5 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகள் 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் ஒருவன் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளான். குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மறுஆய்வு மனு

(தினத்தந்தி) பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கு வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 …

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மறுஆய்வு மனு Read More »

Share

நீதிபதி கர்ணனுக்கு எதிராக நல்லறிவு சோதனை: என்ன நடக்கிறது நீதித்துறையில்?

(கீதா பாண்டே | பிபிசி செய்தியாளர்) இதற்கு முன்பு எப்போதுமில்லாத நெருக்கடிக்கு மத்தியில் இந்திய நீதித்துறை தற்போது உள்ளது. கடந்த பல மாதங்களாக, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை சேர்ந்த சின்னசாமி சுவாமிநாதன் கர்ணனுக்கும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நீதிபதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உண்டாகியுள்ளது. திங்கள்கிழமையன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிபதி கர்ணனுக்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அவருக்கு அரசாங்க மருத்துவர்களைக் கொண்டு …

நீதிபதி கர்ணனுக்கு எதிராக நல்லறிவு சோதனை: என்ன நடக்கிறது நீதித்துறையில்? Read More »

Share

டெல்லி குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி கிரிக்கெட்

டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சில சுவாரஸ்யங்கள்:

► குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா இந்த போட்டியில் 43 பந்துகளுக்கு 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 77 ரன்களை எடுத்ததன் மூலம் தனது 5 ஆயிரம்(5,059) ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் தனது 31வது அரை சதத்தை பதிவு செய்தார். 5066 ரன்களுடன் பெங்களூரு அணியின் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

► டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பேட்டிங்கில் மொத்தம் 20 சிக்சர்கள் விளாசப்பட்டது. அதில் ரிசப் பேண்ட் -9 சிக்சர்களும், சாம்சனின் 7 சிக்சர்களும் ஷ்ரெயாசின் 2 சிக்சர்களும், ஆண்டர்சனின் 2 சிக்சர்களும் அடக்கம்.

► இந்த போட்டியில் 37.3 ஓவர்களில் குஜராத் லயன்ஸ் பேட்ஸ்மேன்களால் 11 சிக்சர்கள், டெல்லி டேர்டெவில்ஸ் பேட்ஸ்மேன்களால் 20 சிக்சர்கள் என மொத்தம் 31 சிக்சர்கள் விளாசப்பட்டது. மொத்தம் எடுக்கப்பட்ட 422 ரன்களில் 186 ரன்கள் சிக்சர்கள் மூலம் பெறப்பட்டவை. அதாவது மொத்த ரன்னில் 44% சிக்சர்கள் மூலம் எடுக்கப்பட்ட ரன்களாகும்.

► இந்தப் போட்டியில் மொத்தம் 31 சிக்சர்கள் விளாசப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு முன் 2010ம் ஆண்டில் சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் 30 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

► டெல்லி டேர்டெவில்ஸ் அணி 214 ரன்களை 17.3 ஓவரில் துரத்திப் பிடித்தது 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாகும். அதற்கு முன் 2007ம் ஆண்டில் சவுத் ஆப்பிரிக்கா அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 17.4 ஓவரில் 208 ரன்களை துரத்திப் பிடித்து வரலாற்றை பதிவு செய்திருந்தது.

► 209 ரன்களை டெல்லி டேர்டெவில்ஸ் அணி  துரத்திப்பிடித்தது ஐபிஎல் வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 2008ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்றப் போட்டியில் 215 ரன்களை துரத்திப்பிடித்து வரலாற்றை பதிவுசெய்திருந்தது.

► சஞ்சு சாம்சன் 7 சிக்சர்களை அவரது பங்கிற்கு விளாசித்தள்ளினார். நிதிஷ் ராணாவிற்குப் பிறகு 7 சிக்சர்களை பவுண்டரிகள் ஏதும் எடுக்காமல் விளாசியது குறிப்பிடத்தக்கது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நிதிஷ் ராணா, பவுண்டரிகள் ஏதும் அடிக்காமல் 7 சிக்சர்களை விளாசியிருந்தார்.

► இந்த ஆட்டத்தில் ரிஷப் பேண்ட் 43 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்கள் அடித்து 97 ரன்கள் பெற்றதன் மூலம் 225.58 ஸ்ட்ரைக் ரேட் பெற்றிருந்தார். இது இந்த சீசனில் 90+ ரன்கள் அடிக்கப்பட்டதில் இரண்டாவது அதிகபட்ச ஸ்ட்ரைக்ரேட் ஆகும்.

► இந்த ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் பேட்ஸ்மேன்களால் 20 சிக்சர்கள் விளாசப்பட்டது, ரன்களை சேஸ் செய்வதில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்களாகும். இதற்கு முன் டெல்லிடேர்டெவில்ஸ் வீரர்களால் இரண்டு முறை 19 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே அதிக பட்சமாக இருந்தது. அதற்கு முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் 15 சிக்சர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

► 214/3 ரன்களை டெல்லி டேர்டெவில்ஸ் அணி அடித்தது இரண்டாவது அதிகபட்சமாகும். இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217/7 ரன்களை டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கெதிராக துரத்தி பிடித்திருந்தது.

► 15 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 200+ ரன்களை டெல்லி டேர்டெவில்ஸ் அணி துரத்திப்பிடித்தது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறை. இதற்கு முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 201 ரன்களை துரத்திப்பிடித்து வெற்றியை பதிவு செய்திருந்தது.

► இந்த போட்டியில் உள்ள மற்றொரு சுவாரஸ்யம் என்னவெனில் கடந்த வருடம் இதே நாளில் நடைபெற்ற குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் ரிசப் பேண்ட் 43 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தார். அந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, குஜராத் லயன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

► இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை அதிக சிக்சர்கள் அடித்தவர்கள்:

வார்னர் – 23 சிக்சர்கள்
உத்தப்பா – 21 சிக்சர்கள்
ரிசப் பேண்ட் – 20 சிக்சர்கள்
சாம்சன் – 19 சிக்சர்கள்

Share
Scroll to Top