அமெரிக்க ராணுவப் புகைப்படக் கலைஞர் ஒருவர் , ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு ஆஃப்கானியர்களுடன் கொல்லப்பட்டார். அவர் தனது மரண தருணத்தை தானே எடுத்த புகைப்படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.
2013 ஜூலை 2 ஆம் தேதியன்று, மோர்டார் ஷெல் குண்டு ஒன்று வெடித்ததில் 22 வயதான வல்லுநர் ஹில்டா கிளேய்டன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த நான்கு படையினர் பலியானார்கள்.
புகைப்பட இதழியல் குறித்து கிளேய்டன் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆஃப்கனிஸ்தானை சேர்ந்த ஒருவர் எடுத்திருந்த புகைப்படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டிருந்தது.
பலியானவர்களில் அவரும் ஒருவர். கிழக்கு மாகாணமான லக்மானில் இந்த விபத்து ஏற்பட்டது.
`மிலிட்டரி ரிவ்யூ` என்ற சஞ்சிகை இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கிளேய்டன் குடும்பத்தாரின் அனுமதியோடு இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.