கைதான 30 ரோஹிஞ்சாக்கள் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டனர்

காங்கேசன்துறை கடற்பரப்பில் சனிக்கிழமை படகு ஒன்றிலிருந்து கைது செய்துள்ள 30 ரோஹிஞ்சா இனத்தவரையும், 2 இந்தியர்களும் திங்களன்று மல்லாகம் நீதிமன்றத்தில் காவல்துறையினர்ஆஜர்படுத்தியுள்ளனர்.

இவர்களில் ரோஹிஞ்சா 30 பேரையும் கொழும்பு மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதிபதி, இந்தியர்களான இரண்டு படகோட்டிகளையும் வரும் 16 ஆம் தேிதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காவல்துறையினருக்கு ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கும் ரோஹிஞ்சாக்களில் 14 பேர் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பெரியவர்கள் என்றும் ஏனையோர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அகதி முகாம் ஒன்றில் இருந்து தப்பி வேறு ஒரு நாட்டுக்குச் செல்வதற்காகப் பயணம் மேற்கொண்டபோது, இவர்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் படகில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top