அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசரணை நடைபெறுகின்றது.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க புரோக்கர் சுகேஷை தாம் சந்தித்தது உண்மைதான் என டிடிவி தினகரன் டெல்லி போலீசில் ஒப்புக் கொண்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் கைதானபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சமும், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.