தன்னிடம் பணிபுரிந்த பெண் ஊழியரை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக, 1,35,000 அமெரிக்க டாலரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 87 லட்ச ரூபாயை) நஷ்ட ஈடாக வழங்கக் கோரி அமெரிக்க வாழ் இந்திய தலைமை செயல் அதிகாரிக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் ‘ரோஸ் இன்டர்நேஷனல் அன்ட் ஐ.டி. ஸ்டாபிங்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருப்பவர், ஹிமான்சு பாட்டியா. இந்தியப் பெண். இவர் அங்கு சான்ஜூவான் கேபிஸ்டிரானோ என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இந்தியாவை சேர்ந்த ஷீலா நிங்க்வால் என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.
இந்தப் பெண்ணை ஹிமான்சு பாட்டியா, ஒரு நாளில் சுமார் 15½ மணி நேரம் வேலை செய்ய வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வாரத்தில் ஒரு நாள்கூட விடுமுறை கொடுக்காமல் வேலை வாங்கி இருக்கிறார். உணவுடன் மாத சம்பளமாக 400 டாலர் (சுமார் ரூ.26 ஆயிரம்) மட்டுமே தந்துள்ளார்.