நமது திரைப்படங்களில் ஈவ் டீசிங்கிலேயே காதல் தொடங்குகிறது: மேனகா காந்தி

கோவாவின் பனாஜி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற துறை மந்திரி மேனகா காந்தி, கடந்த 50 வருடங்களில் நீங்கள் திரைப்படங்களை கவனித்தீர்களானால்… காதல் ஆனது ஏறக்குறைய எப்பொழுதும் ஈவ் டீசிங்கில் இருந்து ஆரம்பிக்கிறது.  இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழிசார் திரைப்படங்களை பற்றி நான் பேசி கொண்டிருக்கிறேன்.

ஒரு நபரும் மற்றும் அவரது நண்பர்களும் ஒரு பெண்ணை சுற்றி வருவர்.  முறையற்ற வகையில் அந்நபர் பெண்ணை சீண்டுவதும், தொடுவதும் பின்னர் மெல்ல மெல்ல அந்த பெண் அவர் மீது காதல் கொள்வதும், அதன்பின் மீதமுள்ள கதையில், சிலருடன் அவர் சண்டை போட்டு பெண்ணை அடைவதும் என இருக்கும்.

அது எப்பொழுதும் வன்முறையிலேயே தொடங்குகிறது.  பின்னர் இன்றைய படங்களை பற்றி நாம் பேசினோமென்றால், உண்மையில் அது 1950களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையையே கொண்டிருக்கிறது.  இந்த ஊடகத்தினை நாம் வன்முறையை தூண்டும் வகையில் பயன்படுத்தி கொண்டு இருக்கிறோமா? என நாம் சிந்தித்திட வேண்டும் என கூறினார்.

Share

1 thought on “நமது திரைப்படங்களில் ஈவ் டீசிங்கிலேயே காதல் தொடங்குகிறது: மேனகா காந்தி”

  1. Hi tɦere I am so excited I found yοur blog, Ι reаlly foynd yoou Ƅү error, whiⅼe I waѕ searching
    on Asojeeve for somеtɦing else, Nonetɦeless І am hеrе
    now and wluld juѕt lke tto ѕay cheers fоr a fantastic post aand а all round interᥱsting blog (I аlso love the theme/design),
    Ι don’t have time tо read it all at the mooment ƅut I ɦave
    saved it ɑnd aⅼso added in уour RSS feeds, so when I һave time I
    ᴡill be back to read a lоt more, Pleasе do keep up tɦe grеat jo.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top