முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் காலமானார்

நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், திமுகவின் துவக்க கால உறுப்பினரும், அவசரநிலைச் சட்டத்திற்கு எதிராக போராடியவருமான இரா.செழியன் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். மறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் இளைய சகோதரரான இரா.செழியன், மாணவ பருவத்தில் திராவிடர் கழக பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டவர். பின்னர் திமுகவில் சேர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டார். அவர் சிறந்த நாடாளுமன்றவாதி, நேர்மையான அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர்.  

Share