தமிழகம்

இழுபறியில் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணி இணைப்பு

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் பிரிந்த அதிமுக கோஷ்டிகளில் முக்கிய இரண்டு கோஷ்டிகளான, முதல்வர்  எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) ஆகியோரின் இரு அணிகளும் 7 மாத பிரிவுக்கு பிறகு விரைவில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவ்விரு அணிகளும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் எவ்வித வித்தியாசமும் காட்டுவதில்லை. ஆதலால், பா.ஜ.க. -வின் தமிழக மற்றும் மத்திய தலைவர்கள் இவ்விரு அணிகளையும் ஒன்று சேர்த்தால் தமிழகத்தில் பா.ஜ.க. வளர வாய்ப்பு …

இழுபறியில் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணி இணைப்பு Read More »

Share

நீட் தேர்வு: ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவு மசோதா ஏற்பு

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு   நீட் தேர்வு அவசியம் என்ற விதியிலிருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் தமிழகத்தின் அவசர சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  பின்னர் இது சம்பந்தமான பல வழக்குகளின் பின்னர், தமிழக மருத்துவக்  கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு   நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் …

நீட் தேர்வு: ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவு மசோதா ஏற்பு Read More »

Share

முரசொலி பவளவிழா : மீண்டும் செப். 5-ம் தேதி நடைபெறும்

மழை பெய்ததால் ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா, மீண்டும் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முரசொலி பத்திரிகை துவங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து,  சென்னையில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆகஸ்டு 10 (வியாழன்) அன்று நிகழ்ந்த பவள விழா வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் …

முரசொலி பவளவிழா : மீண்டும் செப். 5-ம் தேதி நடைபெறும் Read More »

Share

நீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது

மருத்துவ படிப்பிற்கான, நீட் தேர்வு தொடர்பான பல வழக்குகளில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தொடர்ந்து பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள நிலையில்,  85%  இட ஒதுக்கீடு குறித்தான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி வினாக்களுக்கும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மொழி வினாக்களுக்கும் வேறுபாடு இருந்ததாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் …

நீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது Read More »

Share

அதிமுக: தினகரன், சசிகலாவை நீக்குவதாக எடப்பாடி அறிவிப்பு; “நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளானின் அறிவிப்பு” தன்னைக் கட்டுப்படுத்தாது என்கிறார் தினகரன்

அதிமுக-வின் கோஷ்டிகளிடையேயான அதிகாரப் போட்டி தீவிரமடைந்து உள்ளது. பா.ஜ.க.-வுக்கு கட்டுப் பட்டு நடக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிகளை இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதற்கு பதில் அறிவிப்பாக தினகரன், “என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நான் நினைத்தால் முதல்வரை நீக்கலாம். ஆட்சிக்கு ஆபத்து …

அதிமுக: தினகரன், சசிகலாவை நீக்குவதாக எடப்பாடி அறிவிப்பு; “நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளானின் அறிவிப்பு” தன்னைக் கட்டுப்படுத்தாது என்கிறார் தினகரன் Read More »

Share

கேரள மருத்துவமனைகளால் அவசர சிகிச்சை கொடுக்கப்படாமல் அலைகழிக்கப்பட்ட தமிழர் மரணம்

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். ஞாயிற்றுக் கிழமை இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்களில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதையடுத்து இவர் ஆம்புலன்சில் கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு செயற்கை சுவாசம் அளிக்கும் சிகிச்சை வசதி இல்லாததால், முருகனை மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 50 கி.மீ., தொலைவில் உள்ள திருவனந்தபுரம் மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அவர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு இரண்டு மணி நேரம் காக்க …

கேரள மருத்துவமனைகளால் அவசர சிகிச்சை கொடுக்கப்படாமல் அலைகழிக்கப்பட்ட தமிழர் மரணம் Read More »

Share

திருச்சி விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்.-ஐ தாக்க முயற்சி

தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் குத்த ஒருவர் முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகிய 3 பேரும் இன்று 11 மணி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்தனர்.  அவர்களை வரவேற்க 3 பேரின் ஆதரவாளர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை …

திருச்சி விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்.-ஐ தாக்க முயற்சி Read More »

Share

டி.டி.வி.தினகரன்: புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு எதிர்ப்பு

ஆகஸ்டு 5-ம் தேதி தலைமைக் கழக கட்டிடத்தினுள் நுழையப்போவதாக கெடு விதித்திருந்த டி.டி.வி. தினகரன், அதனை செய்யப் போவதில்லை என்று கூறிய பின்னர், மீண்டும் பரபரப்பு உண்டாக்கும் நோக்கத்தில், அதிமுக அம்மா அணியில் 60 புதிய நிர்வாகிகளை நேற்று அறிவித்தார். அவருடைய செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தினகரன் வழங்கிய பதவியை ஏற்க மாட்டோம் என்று 3 எம்எல்ஏக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளராக சசிகலாவினால் …

டி.டி.வி.தினகரன்: புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு எதிர்ப்பு Read More »

Share

அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்று தெரியாது: தேர்தல் ஆணையம்

அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து எதுவும் தீர்மானிக்கப் படவில்லை  என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுவாமிநாதன் கல்யாண சுந்தரம் என்பவர் அதிமுக உட்கட்சி பிரச்சினை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில பதில்களை அளிக்கக் கோரியிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நிகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து, இதுவரை முடிவெடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. துணை பொதுச்செயலாளர் யார் என்ற …

அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்று தெரியாது: தேர்தல் ஆணையம் Read More »

Share

நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டு வெறு இடத்திற்கு மாற்றப்படும்

சென்னை கடற்கரையிலுள்ள காமராஜர் சாலையிலிருந்து நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலினால் இந்த சிலை அகற்றப்பட்டதாகவும், விரைவில் அடையாறில் கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்திற்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிதாக மெரினா கடற்கரையில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என சிவாஜி மகன்களான ராம்குமாரும் பிரபுவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ராம்குமார் மற்றும் பிரபு கூறியதாவது: நீதிமன்ற உத்தரவை ஏற்று, அரசு சிலையை அகற்றுகிறது. அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளோம். கோர்ட்டை …

நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டு வெறு இடத்திற்கு மாற்றப்படும் Read More »

Share
Scroll to Top