தற்போது விற்பனைக்கு வரும் செல்போன்களின் திரை, விளிம்புகளைத் தொட்டவாறு அமைக்கப்படுவதால், அவற்றின் உபயோகப்படுத்தும் பரப்பளவு அதிகமாக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பம்சம் புகழ்பெற்ற செல்போன்களில் இருக்க வேண்டும் என நுகர்வோர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஐ-போன்-X (iPhone X)-ல் இவ்வம்சம் புகுத்தப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே சீனாவின் சியோமி (Xiaomi) நிறுவனம், தமது முதலாவது போனான மி மிக்ஸ் போனில் இவ்வம்சத்தை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து அவர்களது தற்போதைய போனான மி மிக்ஸ் 3 (Mi Mix 3)- யிலும்
Read Moreதொழில் நுட்பம்
2.7 மைல் அகலமுள்ள பாரிய விண்கல் செப்டம்பர் 1 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும்
2.7 மைல் அகலமுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள பாரிய விண்கல் ஒன்று, இவ்வருடம், செப்டம்பர் 1 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப் போகிறது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. ஃப்ளாரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த பெரிய விண்வெளிப் பாறை நமது கிரகத்திலிருந்து 4.4 மில்லியன் மைல்கள் தொலைவில் கடந்து செல்லும். இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலுள்ள தூரத்தைப் போல 18 மடங்கு அதிக தூரமாகும். நாசாவின்
Read Moreஆதார் தகவல்கள் திருட்டு : பெங்களூரு மென்பொருள் பொறியாளர் கைது
40 ஆயிரம் பேரின் ஆதார் தகவல்களை திருடியதாக ஓலா நிறுவனத்தின் பணியாற்றிய, காரக்பூர் ஐஐடி - யில் படித்த, 31 வயது பெங்களூரு மென்பொருள் பொறியாளர் அபினவ் ஸ்ரீவத்சவை (Abhinav Srivastav) பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இவர் ஆதார் தகவல்களை சட்ட விரோதமாக கையாடல் செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அவரை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய அரசின் தனிநபர்
Read More11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல
11 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ராஸ் 128 என்ற மங்கலான சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்திலிருந்து வந்ததாகக் கருதப்பட்ட "விநோத" சமிக்ஞை எதனால் என்று தீர விசாரித்த பிறகு, அது வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து வந்தது அல்ல என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த "விநோத" சமிக்ஞை நம்மால் அனுப்பப்பட்டு தொலைவில் சுற்றுக்கொண்டிருக்கும் துணைக்கோள்களின் சிக்னல் குறுக்கீடுகளால் உருவாகி இருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர். வானியல் வல்லுனர்களைப் பொறுத்தவரை, இதன் உண்மையான மர்மம் என்னவென்றால், இந்த சமிக்ஞைகள் அசாதாரணமான
Read Moreஅடுத்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்–2 செயற்கை கோள்
இன்று காலை ராமேசுவரம் வந்த இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, அங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டுக்கு சென்று, அப்துல் கலாமின் அண்ணன் முகமது மீராலெப்பை மரக்காயரை சந்தித்து நலம் விசாரித்தார். அப்துல்கலாம் மணி மண்டபம் அமைக்கப்பட்டதற்கு நன்றியும் தெரிவித்தார்.பின்னர் மணி மண்டபம் சென்ற மயில்சாமி அண்ணாதுரை அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் மயில்சாமி அண்ணாதுரை , "மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்
Read Moreஇலவச ஜியோஃபோன்: ரூ.1500 டிபாசிட், ரூ.153 மாதக்கட்டணம், வாட்ஸப் இல்லை
ரூ.1500 டிபாசிட்டுடன் இலவசமாக ஜியோ ஃபோன் என்ற அதிரடி அறிவிக்கை ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் மூகேஷ் அம்பானியால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதக்கட்டணமாக ரூ.153 செலுத்தினால் போன்கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி இலவசம் என்று கூறப்பட்டுள்ளது. ஜியோ ஸ்மார்ட் போனில் ஜியோ அப்ளிகேஷன்களான ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவை முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும், பயன்பாட்டாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வாட்ஸப் வசதி தற்போது அந்த ஃபோனில் இருக்காது என்று
Read Moreவெரிலி நிறுவனம் பாக்டீரியா தொற்றிய ஆண் கொசுக்களை கலிஃபோர்னியாவிலுள்ள ஃப்ரெஷ்னோவில் வெளியே அனுப்பியுள்ளது. இது மஞ்சள் காய்ச்சல் கொசுக்களை (Aedes aegypti) ஃப்ரெஷ்னோ விலிருந்து அழிப்பதற்கான முதல் முயற்சி. இக்கொசுக்களால் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, ஜிக்கா வைரஸ் ஆகியவை பரவுகிறது. கூகுளின் துணை நிறுவனமான ஆல்ஃபாபேட்ஸ் லைஃப் சயின்ஸ் (வெரிலி), தனது உயிர் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வகத்தில் ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு மில்லியன் கொசுக்களை உருவாக்க உள்ளது. உலகில்
Read Moreசமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ உலகமெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் சேர்ந்து, செய்திகளை, தகவல்களை, படங்களை பகிர்ந்துகொள்வதில் இளைய தலைமுறையினர் அலாதியான ஆர்வம் கொண்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியா ‘பேஸ்புக்’ உபயோகத்தில் முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் இந்த சமூக வலைத்தளத்தை மொத்தம் 24 கோடியே 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் 24 கோடி பேர் ‘பேஸ்புக்’கை உபயோகித்து வருகின்றனர். எனவே ‘பேஸ்புக்’
Read Moreஇந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்
இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்ட முதலாவது டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார். இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா பெங்களூரில் உள்ள அந்நிறுவனத்தின் சமீபத்திய செய்தி ஊடக சந்திப்பின்போது அதனை அறிமுகப்படுத்தினார். இவ்வாகனம் இன்ஃபோஸிஸின் மைசூர் வளாகத்தில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறைகளில் ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இந்த மாதிரியான வாகனம்
Read Moreபுதன் கோளைச் சுற்றப் போகும் இரட்டை செயற்கைக் கோள்கள் சென்றடைய 7 ஆண்டுகள் ஆகும்
புதன் கோளுக்கு கொண்டு செல்லும் இரட்டை செயற்கைக்கோள் தயாராகிவிட்டது. அது ஊடகவியலாளர் பார்வைக்காக நெர்லாந்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. புதன் கோளுக்கு அனுப்புவதற்கான இரட்டை செயற்கைக்கோள்கள் தயாராக உள்ளன. பெப்பிகொலம்போ விண்வெளி பயணத்திற்கு தயாராக உள்ள இந்த செயற்கைக்கோள்களை, நெதர்லாந்தில் உள்ள நூர்ட்விக்கில் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது. இந்த இரு செயற்கைக்கோள்களும், விண்ணில் ஏவப்பட்ட பின்னர் புதன் கிரகத்தை சென்றடையும். அதன் பின்னர், அவை
Read More