Home > இந்தியா > ஜி.எஸ்.டி.
இந்தியாஜி.எஸ்.டி.தலைப்புச் செய்திகள்பிரதமர்மோடி

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் இந்தியாவில் பெரும் மாற்றமாம்: மோடி சொல்கிறார்

ஜிஎஸ்டி வரி விதிப்பினால் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும், சகல பெருட்களின் விலைகளும் வெகுவாக  குறைந்துவிட்டது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சியில் இன்று வானொலியில் உரையாற்றிய நரேந்திர மோடி, சிறந்த முன்மாதிரியான திட்டத்துக்கு இது ஒரு உதாரணம் என்றார். மேலும் அவர் கூறியதாவது: நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கண்காணித்து வருகிறோம். அங்கு மத்திய மாநில

Read More
இந்தியாஜி.எஸ்.டி.தலைப்புச் செய்திகள்

ஜிஎஸ்டி இணையதளத்தில் 2 லட்சத்திற்கும் மேலானோர் பதிவு

 ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஜி.எஸ்.டி இணையதளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் என்று வருமான வரித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹஸ்முக் ஆதியா கூறியாதாவது:- ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஜிஎஸ்டி இணையதளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். 39,000 பேர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். மக்கள் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய  பொருட்களுக்கு ஜிஸ்டி யில் குறிப்பிடப்படவில்லை. சிறு குறு வணிகள் ஏற்கனவே

Read More
சினிமாஜி.எஸ்.டி.தமிழகம்தமிழ் சினிமாதலைப்புச் செய்திகள்

ஜி.எஸ்.டி. வரியால் சினிமா கடுமையாக பாதிக்கப்படும்: நடிகர் விஷால்

ஜி.எஸ்.டி. வரியால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறினார். நாடு முழுவதும் ஒரே சீரான சரக்கு சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி) முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. சினிமா துறைக்கு ரூ.28 சதவீத வரி விதிக்கப்பட்டு ஒட்டு மொத்த திரைப்படத்துறையினர் எதிர்ப்பால் 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுக்கு 18 சதவீத வரி என்றும் அதற்கும் அதிகமான தொகையை வசூலிக்கும் டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத வரி என்றும்

Read More
சினிமாஜி.எஸ்.டி.தமிழ் சினிமா

ஜி.எஸ்.டி: சினிமா மீது விதிக்கப் படும் வரி விதிப்பை எதிர்த்து கமல் ட்வீட்

வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ள செய்தி : “ஒரே நாடு ஒரு வரி என்ற ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் சரக்கு, சேவை வரி விதிப்பை வரவேற்கிறேன். ஆனாலும் தற்போது உள்ள வரி விதிப்பு வித்தியாசங்களில் சில திருத்தங்கள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். அது முடியாத பட்சத்தில் தமிழ் சினிமாவுக்கு பெரிய அழுத்தமாகவே இந்த சரக்கு சேவை வரி அமையும்.

Read More
இந்தியாஉணவுப்பொருள்கள்ஜி.எஸ்.டி.தமிழகம்தலைப்புச் செய்திகள்

ஜி.எஸ்.டி.யின் தாக்கம் : ஹோட்டல் உணவுப் பொருள்கள் மற்றும் சினிமா கட்டணங்கள் விலை உயர்ந்தன

புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஜி.எஸ்.டி.யினால் ஹோட்டல்களில் விற்பனையாகும் உணவுப்புருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. குளிர்சாதன வசதியுடைய ஹோட்டல்களில் 18% சேவை வரியும் இல்லாத ஹொட்டல்களில் 12 % சேவை வரியும் விதிக்கப்படுவதால், இட்லி உள்ளிட்ட அனைத்து விதமான உணவுப்பண்டங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ரூ. 5 -க்கு விற்கப்பட்ட இட்லி தற்போது ரூ. 22 வரை விற்கப்படும் என்று தெரிய வருகிறது. இதுபோல, தியேட்டரில் டிக்கெட் கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுகின்றது. ரூ. 100-க்கு குறைவாக கட்டணம்

Read More
இந்தியாகுடியரசு தலைவர்ஜி.எஸ்.டி.தலைப்புச் செய்திகள்பொருளாதாரம்மோடி

புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக் கிழமை) நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தொடங்கி வைத்தனர். நம் நாட்டில் தற்போது இருக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி என்ற பல்வேறு விதமான மறைமுக வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு, சேவை வரி என்ற புதிய ஜி.எஸ்.டி. வரி  மத்திய அரசு முடிவு செய்தபடி, ஜூலை

Read More
ஜி.எஸ்.டி.தமிழகம்தலைப்புச் செய்திகள்ஸ்டாலின்

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. : வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு; பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பு என்கிறார் ஸ்டாலின்

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாளை மாநிலம் முழுவதும் கடையடைப்பில் ஈடுபடுகிறார்கள். மேலும், தமிழகத்தில் அமல்படுத்தப்படும் ஜி.எஸ்.டி. வரியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அ.தி.மு.க. அரசே பொறுப்பு என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ஒரே நாடு ஒரே வரி” என்று வம்படியாக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அவசர அவசரமாக மத்திய அரசு கொண்டு வருவது ஒருபுறமிருக்க, அதை

Read More
இந்தியாஜி.எஸ்.டி.டில்லி

ஜி.எஸ்.டி. அறிமுக விழா: மக்களவையில் இன்று ஒத்திகை

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்வதற்கான விழா, வரும், 30ம் தேதி இரவு நடக்க உள்ளது. இந்நிலையில், பார்லிமென்ட்டில், இன்று அதற்கான ஒத்திகை நடக்க உள்ளது. ஜூலை, 1 முதல் ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக, இந்த வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும் விழா, பார்லிமென்ட் மைய மண்டபத்தில், வரும், 30ம் தேதி இரவு, 12:00 மணிக்கு நடக்க உள்ளது.

Read More
இந்தியாஜி.எஸ்.டி.தலைப்புச் செய்திகள்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஜூன் 30 நள்ளிரவிலிருந்து அமலாகிறது

ஜி.எஸ்.டி. என்ற சரக்கு சேவை வரி விதிப்பு வரும் 30ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். "ஜி.எஸ்.டி.யின் செயல்பாட்டிற்காக பல்வேறு கருத்தியல்களுடைய  அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதையும் ஒரு மாற்றத்தையும் இந்த உலகமே காணப்போகிறது" என்று பிரதமர் மோடி லக்னவில் தெரிவித்தார். மேலும் அவர், ஜூலை 1-ல் ஜிஎஸ்டி துவங்கப்போவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். நாடு முழுவதும்

Read More
இந்தியாஜி.எஸ்.டி.

ஜி.எஸ்.டி., சான்று பெற கைகொடுக்கிறது மொபைல் போன்

ஜி.எஸ்.டி., பதிவுக்காக, வலைதளத்தில் விண்ணப்பிக்கும் போது, அதற்கான சான்று கிடைப்பதில் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக நிறுவனங்களும், வர்த்தகர்களும் தெரிவித்து உள்ளனர்.இப்பிரச்னை குறித்து, மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: டிஜிட்டல் கையொப்பம் மூலம் பதிவு சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், வங்கி விபரங்களை அளித்து பெறலாம் அல்லது மொபைல் போன் மூலம் கடவுச் சொல் பெற்றும் சான்று பெறலாம். ஜி.எஸ்.டி.,க்கு விண்ணப்பிப்போர் பான் கார்டு, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி,

Read More