திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
Home > இலங்கை > யாழ்ப்பாணம்: தமிழ் நீதிபதி கார் மீது துப்பாக்கிச் சூடு
இலங்கைதலைப்புச் செய்திகள்யாழ்ப்பாணம்வடக்கு மாகாணம்

யாழ்ப்பாணம்: தமிழ் நீதிபதி கார் மீது துப்பாக்கிச் சூடு

இலங்கை, வடக்கு  மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் முக்கிய தமிழ் நீதிபதியாக உள்ளவர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன். இவர் மிகவும் தைரியமான நீதிபதி என்று பெயர் பெற்றவர்.

நல்லூர் பின்வீதி வழியாக தனது மெய்ப்பாதுகாவலருடன்  நீதிபதி இளஞ்செழியன் தனது காரில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது,  அவரது கார் நாற்சந்தியை வந்தடைந்தபோது, அதற்கு வழிவிடும் வகையில், மோட்டர்சைக்கிளில் வந்த  மற்றொரு மெய்ப்பாதுகாவலர்,  வாகனங்களை மறித்து வழியேற்படுத்தினார்.

அப்போது, அந்த இடத்தில்  வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த காவலருடைய இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து நீதிபதியின் காரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.

அந்த நபர் துப்பாக்கியைப் பறித்தெடுத்தபோது, அந்த காவலருடன் இடம்பெற்ற இழுபறியில் காவலர் காயமடைந்தார்.

நீதிபதி மாணிக்கவாசகரின் பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்த மர்ம நபர் சுட ஆரம்பித்ததாக போலீசார் தெரிவித்தனர். நீதிபதியுடன் இருந்த மற்றொரு காவலர் மர்ம நபரை நோக்கிச் சுட்டார். இதில் நீதிபதிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது.

காவலர்கள் இருவரும் மருத்துவமனையில் அநுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிமுள்ள இடத்தில் தமிழ் நீதிபதி மீது கொலை முயற்சி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

Share

One thought on “யாழ்ப்பாணம்: தமிழ் நீதிபதி கார் மீது துப்பாக்கிச் சூடு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன