11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல

11 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ராஸ் 128 என்ற மங்கலான சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்திலிருந்து வந்ததாகக் கருதப்பட்ட “விநோத” சமிக்ஞை எதனால் என்று தீர விசாரித்த பிறகு, அது வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து வந்தது அல்ல என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த “விநோத” சமிக்ஞை நம்மால் அனுப்பப்பட்டு தொலைவில் சுற்றுக்கொண்டிருக்கும் துணைக்கோள்களின் சிக்னல் குறுக்கீடுகளால் உருவாகி இருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர்.

வானியல் வல்லுனர்களைப் பொறுத்தவரை, இதன் உண்மையான மர்மம் என்னவென்றால், இந்த சமிக்ஞைகள்  அசாதாரணமான விண்மீன் நிகழ்வுகளாலா , பிற பின்னணி பொருள்களிலிருந்து உருவானவையா அல்லது செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளின் குறுக்கீடுகளாலா என அவர்கள் அறுதியிட்டுக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான்.

“இந்த சிக்னல்கள், வேற்று கிரக வாசிகளிடமிருந்து வந்திருக்க கூடும் என்பதே பலரையும் இவ்விஷயத்தில் ஆர்வம் காட்டச் செய்தது”, என்கிறார் போர்டோ ரிகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அபெல் மென்டெஸ் எனும் வானியல் நிபுணர்.

பிரபஞ்சத்தில் வேறு இடங்களில் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதற்கான நிபுணர் குழுவினை வரவழைத்து, இது குறித்த அவர்களின்   ஊகங்களையும் கேட்டறிந்த பின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேற்றுக் கிரகவாசி ஆராய்ச்சிக் குழுவின்  (SETI) பெர்க்லி ஆராய்ச்சி மையம்  அதன் முடிவை வெளியிட்டுள்ளது.

“இச்சமிக்ஞைகளுக்கான சரியான விளக்கமாக இவை  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புவிசார் செயற்கைக்கோள்களில் இருந்து வெளியான தகவல் பரிமாற்றங்களே ஆகும். ராஸ் 128 நட்சத்திரமானது நமது வான்வெளி நடுக்கோட்டில் (celestial equator) காணப்படுகிறது; இங்குதான் நமது புவிநிலை செயற்கைக்கோள்களும் (geostationary satellites) காணப்படுகின்றன.”

 

 

Share

1 thought on “11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல”

  1. Pingback: 11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல – thenthidal | தென் த

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top