Day: July 21, 2017

இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டின்  அரைஇறுதிப் போட்டியில் இந்திய அணி, தற்போதைய சாம்பியனான ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியைச் சந்திக்கவுள்ளது. இப்போட்டியில் 171 ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், தனக்கு கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்து காட்டியிருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், எனது வாழ்க்கையில் நான் விளையாடிய மிகச்சிறந்த ஆட்டம் இது தான் என்றும் கூறினர். இந்திய கேப்டன் …

இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி Read More »

Share

இலவச ஜியோஃபோன்: ரூ.1500 டிபாசிட், ரூ.153 மாதக்கட்டணம், வாட்ஸப் இல்லை

ரூ.1500 டிபாசிட்டுடன் இலவசமாக ஜியோ ஃபோன்  என்ற அதிரடி அறிவிக்கை ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் மூகேஷ் அம்பானியால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதக்கட்டணமாக ரூ.153 செலுத்தினால் போன்கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி இலவசம் என்று கூறப்பட்டுள்ளது. ஜியோ ஸ்மார்ட் போனில் ஜியோ அப்ளிகேஷன்களான ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவை முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும், பயன்பாட்டாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வாட்ஸப் வசதி தற்போது அந்த ஃபோனில் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் தினசரி 4G டேட்டா …

இலவச ஜியோஃபோன்: ரூ.1500 டிபாசிட், ரூ.153 மாதக்கட்டணம், வாட்ஸப் இல்லை Read More »

Share

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும்

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும் என்று அமெரிக்க பாராளுமன்ற குழு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தின், ஒதுக்கீட்டுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில், 2018-ம் ஆண்டுக்கான மாகாணம் மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகள் ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஓட்டெடுப்பு நடத்தி ஒப்புதல் வழங்கப்பட்டது. இம்மசோதவின்படி அவர் பாகிஸ்தானுக்கு நிதி …

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும் Read More »

Share

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 25-ந் தேதி பதவி ஏற்கிறார்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்கிறார். ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற மக்களவை செயலாளருமான அனூப் மிஷ்ரா நேற்று மாலை ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தலித் தலைவர் ஆவார். இவர் 2-வது தலித் ஜனாதிபதி என்ற பெருமையை பெறுகிறார். 1997 முதல் 2002-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்த கேரளாவைச் …

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 25-ந் தேதி பதவி ஏற்கிறார் Read More »

Share

துருக்கி-கிரீக்கில் 6.7 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டது

துருக்கிய கடற்பகுதியிலும், சில கிரேக்க தீவுகளிலும் 6.7 அளவு நிலநடுக்கமும் அதன் விளைவாக  ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது. கடற்கரை நகரான மர்மைசை ஆழிப்பேரலை தாக்கியதால் வீடுகளும் கட்டிடங்களும் நீரில் மூழ்கின. கிரேக்கத் தீவான கோஸில் குறைந்தது 2 பேராவது இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு அதிகமான தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Share
Scroll to Top