சனிக்கிழமை, ஏப்ரல் 21, 2018
Home > இந்தியா > கற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலி மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு
இந்தியாதலைப்புச் செய்திகள்பா.ஜனதாமேற்கு வங்காளம்

கற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலி மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு

மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதற்காக பிஜேபி எம்.பி. ரூபா கங்குலி மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

“நான் இந்திய மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும், திரிணாமுல் காங்கிரசை ஆதரிக்கும் எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்…..  மம்தா பானர்ஜியின் விருந்தினராக அல்லாமல் உங்கள் மனைவிகளையும் மகள்களையும் மேற்கு வங்காளத்திற்கு அனுப்பிப் பாருங்கள்… அவர்கள் 15 நாட்களுக்கு மேல் கற்பழிக்கப்படாமல் அங்கேயே உயிர் பிழைத்திருந்தால் என்னிடம் வந்து சொல்லுங்கள்…”, என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று குதற்கமாக பொது நிகழ்ச்சியில் ரூபா கங்குலி பேசியிருந்தார்.

இதற்கு திரிணமூல் காங்கிரஸ், ரூபா கங்குலி மேற்கு வங்காளத்தின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார் என்று பதிலளித்தது.

இருப்பினும், நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரூபா, தனது கருத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டார். எனவே தற்போது அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன