சனிக்கிழமை, மே 26, 2018
Home > இந்தியா > காஷ்மீர் பிரச்னையில் சீனாவின் மத்தியஸ்தம் ஏற்க முடியாதது : இந்தியா
இந்தியாகாஷ்மீர்சீனாதலைப்புச் செய்திகள்

காஷ்மீர் பிரச்னையில் சீனாவின் மத்தியஸ்தம் ஏற்க முடியாதது : இந்தியா

காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நாடான சீனாவின் மத்தியஸ்தத்தை ஏற்க முடியாது என்று இந்தியா நிராகரித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, இதற்கு பதில் அளித்துப் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தை ஏற்க முடியாது என்றும், அது இருநாடுகள் இடையிலான பிரச்னை மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் காஷ்மீர் விவகாரம் என்பது அந்த மாநில மக்கள் சம்பந்தப்பட்டது என்றும், இதில் எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாகவும் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இருநாடுகளின் பிரச்னை என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

மேலும், காஷ்மீரில் ரசாயன ஆயுதங்கள் எதையும் இந்தியா பயன்படுத்தவில்லை என்றும், இதுதொடர்பான பாகிஸ்தானின் புகார்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

டோக்லாம் பிரச்சனை

டோக்லாம் பிரச்சனை குறித்து சீனா தெரிவித்த கருத்து எதுவாக இருப்பினும், இந்தியாவைப் பொறுத்தவரையில் இப்பிரச்சனை தூதரக தரப்புகளினால் தீர்த்து வைக்கப்படும்.  கடந்த காலங்களில் பெய்ஜிங் உடனான பல விவகாரங்களையும் தூதரக தரப்புகள் தீர்த்து வைத்திருக்கிறார்கள் என்று கோபால் பாக்லே தெரிவித்தார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன