இந்தியாவுக்கும் சீனவுக்கும் இடையிலான எல்லை தொடர்பான மோதல் நிலவிவரும் சூழலில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சீன தூதர் லுயோ ஜாயோஹூ சந்தித்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, எல்லையில் ஆயிரம் சீன வீரர்கள் அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த நிலையில், அந்நாட்டு அதிபரோடு ஊஞ்சலில் அமர்ந்து பேசுபவன் நானல்ல என்று கூறியுள்ளார். அண்மையில் சீனாவில் அதிபர் ஜிங்பிங்குடன் மோடி ஊஞ்சலில் அமர்ந்து பேசிய படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். சீனத் தூதர் தன்னை சந்தித்தது குறித்து கவலைப்படும் மத்திய அரசு, இருநாடுகள் இடையே பதற்றம் நிலவும் சூழலில் மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் சீனாவுக்கு பயணம் சென்றதேன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் “பாஜகவின் பக்த ஊடகங்கள் செய்தி வெளியிடும் முன்னர் உண்மைத்தன்மையை சோதிக்க வேண்டும்” என்று காட்டமாக பதிவுசெய்திருந்தார்.