அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்

காஷ்மீரில் பர்ஹான் வானி நினைவு தினத்தை முன்னிட்டு  ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக கடந்த இரு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

 

ஞாயிற்றுக்கிழமை அமர்நாத் யாத்திரையின் துவக்கத்தைக் குறிக்க பஹல்கம்  முகாமுக்கு அருகே சிறப்புப் பூஜை நடைபெற்றது.  சுவாமி அமர்நாத் ஜெய் வருடாந்த புனித யாத்திரையின் துவக்க விழாவைக் குறிக்கும் வகையில் ‘வியாச-பூர்ணிமா’ நிகழ்ச்சியில் பஹல்கம்மில் பூமி-புஜான், நவக்ரா-புஜான், சாகரி-பூஜான் மற்றும் தவாஜோருஹன் விழாக்கள் வெத மந்திரங்கள் முழங்க, நிகழ்த்தப்பட்டன.

 

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதி பர்ஹான் வானி நினைவு தினத்தை அனுசரிக்க போவதாக பிரிவினைவாதிகள் அறிவித்ததால் அங்கு பதற்ற நிலை நிலவியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை கடந்த இரு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top