குற்றமற்ற அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை கைவிட விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் கடிதம்
இலங்கை வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தணிப்பதற்காக, குற்றவாளிகளாக இனம் காணப்படாத இரு அமைச்சர்களின் தண்டனையில் திருத்தம் தேவை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசைக் கலைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநரிடம் ஸ்டாலின் மனு
தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்துசெய்துவிட்டு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண்களின் மார்பைத் தொடுவதற்காக தந்திர வித்தைக்காரராக காட்டிக்கொண்டவரால் சர்ச்சை
சீனாவில் பெண்களின் மார்பகங்களை தொடுவதற்காக தன்னை ஒரு தெரு தந்திர வித்தைக்காரர் போல காட்டிக் கொண்ட தனது காணொளியை, வலைப்பூ பதிவர் ஒருவர் பதிவேற்றியதை அடுத்து அந்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை அவர் கிளப்பியுள்ளார்.
ஆளுநரிடம் ஆட்சியைக் கலைக்க வலியுறுத்தி உள்ளோம்: ஸ்டாலின் பேட்டி
ஆளுநரிடம் ஆட்சியைக் கலைக்க வலியுறுத்தி உள்ளோம் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை ராஜ்பவனில் சனிக்கிழமை மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். உடன் துரைமுருகன், கே.ஆர்.ராமசாமி, அபுபக்கர் ஆகியோர் இருந்தனர்.
2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு: பிரகாஷ் ஜவடேகர் தகவல்
ஏழு அம்ச திட்டம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
நீர்ப்பாசன வசதியை அதிகரிப்பது, தரமான விதைகள் அளிப்பது, அறுவைக்கு பிந்தைய தானிய இழப்பை தடுப்பது உள்ளிட்ட 7 அம்ச திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதிமுக நடத்தும் இப்தார் விருந்து.. எடப்பாடி தலைமையில்.. து.பொ.செ.வுக்கு நோ அழைப்பு
அதிமுக சார்பில் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் இப்தார் நோன்பு நிகழ்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் நடக்கும் என்று அதிமுக தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் மகனை கொஞ்சும் பாசக்கார டோணி.. வைரல் போட்டோ
பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் மகனை, இந்திய முன்னாள் கேப்டன் டோணி தூக்கி வைத்திருக்கும் போட்டோவை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.