Day: April 7, 2017

தில்லி ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற அய்யாகண்ணு கைது

தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற்தால், விவசாயி அய்யாகண்ணு கைது செய்யப்பட்டார். அவர் உட்பட 15 விவசாயிகளை தில்லி போலிஸ் கைது செய்தது. பிறகு, அய்யாகண்ணுவுடன் போராடிய 15 விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் விடுவிக்கப் பட்டனர். அய்யாகண்ணுவிடம் தில்லி நாடாளுமன்ற வீதி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Share

விவசாயக் கடன் தள்ளுபடி கூடாது: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவுறுத்தல்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  ரூ 36,359-கோடி விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்த இரண்டு நாட்களில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் உர்ஜிட் படேல் வியாழக்கிழமை அத்தகைய நடவடிக்கை “நேர்மையான கடன் கலாச்சாரத்தை குறைத்து மதிப்பிடுவதாக” மற்றும் “தேசிய சமநிலையைப் பாதிக்கிறது” என்றும் கூறினார்.

Share

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி வருகை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்ட விக்ரம் பத்ரா, தனது பணியை நேற்று தொடங்கினார். பணப் பட்டுவாடாவை தடுக்க 70 நுண் பார்வையாளர்கள் இருசக்கர வாகனத்தில் தொகுதி முழுவதும் ரோந்து செல்கின்றனர். பாதுகாப்பு பணிக்காக இதுவரை 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆர்.கே.நகரில் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் காலியாக உள்ள 10 சட்டப்பேரவை மற்றும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் தமிழ கத்தின் …

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி வருகை Read More »

Share
Scroll to Top